Jun 26, 2017

Advice from Amma

Padithathil pidithathu
காலைல சீக்கரமா எழுந்துக்கோ.
பல் தேய்ச்சு வெளக்கேத்திட்டு வாச தெளிச்சு கோலம் போட்டுட்டு அடுப்ப பத்த வை.
விடிகாலைல பண்றது எல்லாம் நாள் முழுக்க உன்ன சந்தோஷமா வச்சுக்கும். 
காபிய தூக்கிக் குடி. குடிச்ச டம்ளர அலம்பி வை.
பாத்ரூம் போயிட்டு கைகால அலம்பிண்டு வா.
பின்னங்கால்ல தண்ணியே படல. நளன் கதை தெரியுமோல்லியோ.
குளிக்காம சாப்டாத. கூழானாலும் குளித்துக் குடிம்பா.
எச்சல் பத்து பாக்கணும். சாப்ட்ட ப்ளேட்ட அலம்பிப் போடு. தட்டு காஞ்சா வயிறு காயும்பா.
பத்தொழிச்சு போட்டா பாத்தரத்துல தண்ணி ஊத்தி ஊற வை. வேலக்காரியும் மனுஷிதான.
வெளிலேர்ந்து வந்தா வாசல் கொழாய்ல கை கால் நல்லா அலம்பிண்டு உள்ள வா. பஸ்ஸுல இடிச்சுண்டு விழுந்துண்டு வந்துருப்ப உள்ளபோய் வேற ட்ரஸ்ஸ போட்டுண்டு மூஞ்சி அலம்பி நெத்திக்கிட்டுண்டு வா.
சாயங்காலம் வெளக்கேத்தர வேளைல தூங்காத குடும்பத்துக்கு ஆகாதும்பா.
வெளகேத்தி நாலு ஸ்லோகம் சொல்லு மனசெல்லாம் தொடச்சு உட்டா மாதிரி பளிச்சுன்னு இருக்கும்.
எட்டு மணிவர படி. சாப்புடு. சாப்ட்ட எடத்த தொட. தொடச்ச துணிய கையோட அலசி ஒணத்து. அப்பிடியே போட்டா ஒனக்கு பொறக்கற கொழந்த கறுப்ப பொறக்கும்பா
சாப்ட்ட ஒடனே தூங்காத. மேடைய தொடச்சு கோலம் போடு. காத்தால எழுந்து வேலய ஆரம்பிக்கறச்சே மனசுக்கு எதமா இருக்கும்
தூங்கறத்துக்கு முன்னாடி வேலும் மயிலும் துணைன்னு சொல்லி வீபூதி இட்டுண்டு படு. அந்த முருகன் உன்ன நன்னா வச்சுப்பான்.
இப்பிடீ நாள் முழுதுக்கும் பண்ண வேண்டியதுக்கு சொல்லிண்டே இருப்பா என் அம்மா. அப்போ கடுப்பா இருந்துது.
இப்போ எனக்கு ஏழு கழுத வயசாச்சு ஆனாலும் இப்பவும் என் அம்மாவின் மேற்படி வாசகங்கள் காதில் ஒலித்து என்னை இத்தனைல பாதியாவது ஒழுங்கா பண்ண வச்சுண்டுருக்கு. 

Now I can see that All these were only instructions for hygiene and psychological stress relief.
In this age of fast life, we are pushed by doctors to relieve our stress by early morning walk.
Keep our things clean and hygiene.
Wash our hands and feet regularly to keep germs away. Brush our teeth twice a day.
Calm our selves before going to bed etc.
I bow to you Amma who made it so easy for me to stay healthy and happy

-- Anonymous